கதை களம்.
ஏலியன்களுக்கும்
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும்
நடக்கும் மோதல்கள்,இக்கட்டான சூழ் நிலையை கேப்டன் கையாளும் விதம், கிராஃபிஃஸ் தொழில்
நுட்பம், ரானுவ வீரர்கலின் யுக்திகள்
நுட்பம், ரானுவ வீரர்கலின் யுக்திகள்
கதை சுருக்கம்.
த பேட்டில்சிப் படம் 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. வழமை போல, நாசா விஞ்ஞானிகள் எங்களது பால்வெளியில் வேற்று கிரகவாசிகள் வாழக்கூடும் என்று கணிக்கிறார்கள்! அதன் பிரகாரம், நாசா விஞ்ஞானிகள் பலகோடி மைல் தொலைவில் இருக்ககூடிய வேற்று கிரகங்களுக்கு, சென்று கிடைக்ககூடிய வகையில் பாரிய சிக்னல் அலைவரிசையை அனுப்பிவைக்கிறார்கள்! அனுப்பி வைத்துவிட்டு, கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்! அதற்கான பலாபலன் 7 வருடங்கள் கழித்து புவிக்கு ஏலியன் வடிவில் வருகிறது! அதை எப்படி நாசாவும், அமெரிக்க படைகளும் எதிர்கொள்ளுகிறது! எனபதுதான் படத்தின் கதை.
இதற்கு மத்தியில் அமெரிக்கபடையின் தளபதி ஒருவரின் காதலையும் இணைத்து அந்த நாட்டு மக்களின் தேசிய உணர்வையும் கலந்து தந்து இருக்கிறார் THE BATTLESHIP இயக்குனர் Peter Berg.
Peter
Berg தொடர்பில் சொல்ல தேவையில்லை! அவர் ஒரு திறமையான கதை சொல்லி என்பதை, முன்னைய படங்கள் மற்றும், அவர் இயக்கிய தொலைகாட்சி தொடர்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்! அது போலவே, ஏற்கனவே நன்கு அறிந்த ஏலியன் கதையை கூட, சுவாரசியமாக, பிரமாண்டமாக தந்து இருக்கிறார்
ஏலியன்கள் வருகை, அமெரிக்க படைதளபதிகளின் போராட்டம், உணர்வற்று பொறுப்பில்லாமல் இருக்கும் நம்ம ஹீரோ அமெரிக்க கடற்படை தளபதிக்கு ஒரு கட்டத்தில் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை வருமிடம், ஜப்பான் மற்றும் அமெரிக்க கடற்படை தளபதிகள் இணைந்து செயல்ப்படுமிடம், ஊனமுற்ற அமெரிக்க இராணுவ வீரரின் தேசியபற்று, ஏலியன்களை அழிப்பதற்கான யுக்தி! இப்படி பல இடங்களில் கதையை அருமையாகவும், சுவாரசியமாகவும் அமைத்ததன் மூலம் இயக்குனர் படத்தை BOX OFFICE வெற்றியை நோக்கை நகர்த்தி இருக்கிறார் என்று சொல்லலாம். படத்தின் பெரும்பகுதி கடல் பகுதியில் இடம்பெறுவதால், அந்த காட்சியமைப்புக்களில் எந்தவிதமான செயற்கை தன்மையும் தெரியாதவண்ணம், காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள் என்பதை பார்த்தவர்கள் புரிந்து கொள்ளலாம்! இசை கூட படத்துக்கு ஒருவகையில் பக்கபலம்தான்!
English Name : The Battleship (2012)
Language : English
Country : United States
Directed By : Peter Berg
Wiki Page For : The Battleship (2012)
English Reviews : The Battleship (2012)
English Reviews : The Battleship (2012)
Tamil Reviews : The Battleship (2012)
Battleship (2012) Official Trailer HD