கதை களம்.
ஹாரர், த்ரில்லர் வகை படங்கள் எப்பொழுதும்
மனிதர்களையோ
அல்லது பேய்களை மிகவும் அகோரமாக காட்டி பார்வையாளர்களை
பயமுறுத்துவார்கள்.. ஆனால் இந்தப்படத்தில்
காட்சி அமைப்புகள் பயமுருத்தும் வகையில் பயணிகிறார்கள்.கதையுள்ள பேய்கதை.
காட்சி அமைப்புகள் பயமுருத்தும் வகையில் பயணிகிறார்கள்.கதையுள்ள பேய்கதை.
கதை சுருக்கம்.
காலராடோ
என்ற ஊரின் மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய ஹோட்டலை பனி பொழியும் நாட்களில் பாதுகாப்பதற்காக
தன் மனைவி மற்றும் மகனுடன் செல்கிறான் ஜாக் டோர்ரன்ஸ். பனிக்காலம் என்பதால் பனிப்பொழிவு
அந்தப்பகுதியில்
மிக அதிகமாக இருக்கும், அந்த சமயத்தில் ஹோட்டல் இயங்காது. அதனால் ஹோட்டலை பராமரிக்கும்
பணிக்கு ஜாக் டோர்ரன்ஸ் அமர்த்தப்படுகிறான், அந்த சமயத்தில் அவன் குடும்பம் மட்டும் தான் அங்கு இருக்கும். எழுதுவதில் ஆர்வமுள்ள ஜாக் டோர்ரன்ஸ் இந்த தனிமை தனக்கு எழுதுவதற்கு
உபயோகமாக இருக்கும் என்றுநினைத்து
இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறான். இந்த பணியில் சேரும் முன்பு அந்த ஹோட்டல் மேனேஜர் சில வருடங்களுக்கு
முன் ஒரு சம்பவம் நடந்ததாக ஜாக்கிடம் கூறுகிறான். அங்கு அவனைப்போல ஹோட்டலை பாதுகாப்பதற்கு
வரும் ஒருவன் தனிமையின் காரணமாக பித்துப்பிடித்து தன் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளையும் கொன்று, பின்பு தானும் தற்கொலை செய்து கொள்கிறான் என்று ஜாக்கிடம் சொல்கிறான். ஜாக் இந்த சம்பவத்தை பெரிதுப்படுத்தாமல் பணியில் சேருகிறான்.
அவர்களது
மகனுக்கு ESP
(Extrasensory perception ) எனப்படும் சக்தி உண்டு, நடந்த சம்பவங்கள் மற்றும் நடக்கபோகும்
சம்பவங்களை முன்கூட்டியே
அறியும் மற்றும் பார்க்கும் திறன். இந்த அபூர்வ சக்தியை பற்றி அவனது பெற்றோருக்குக்
கூட தெரியாது. அவன் நடக்கப்போகும்
சில சம்பவங்களை பற்றி தன் அம்மாவிடம் சொல்லும்போது, அதை அவள்நம்பாமல்
அவனுக்கு ஏதோ குறை என்று எண்ணுகிறாள்.
ஹோட்டலுக்கு
வரும் ஜாக்கின் குடும்பத்திற்கு
ஹோட்டலை சுற்றிக்காட்டுகிறார் அங்கு வேலை செய்யும் சமையல்காரர், அவருக்கும் ESP
(Extrasensory perception ) எனப்படும் சக்தி உண்டு. டேனியிடமும்
அந்த சக்தி இருப்பதை அறிந்து கொள்கிறார். அந்த ஹோட்டலில் ரூம் 237
-க்கு
மட்டும் போக வேண்டாம் மற்றும் அந்த ஹோட்டலில் கெட்ட சக்தி இருக்கிறது என்று எச்சரித்து விட்டு கிளம்புகிறார்.
தனது
மனைவி மற்றும் மகனுடன் ஜாக் அங்கு தனியாக வசிக்க துவங்குகிறான் , ஜாக் தனது புத்தகம் எழுதும் வேலையில் மூழ்கிப்போகிறான். அவனது மனைவி சமையல் வேலைகளை கவனித்து வருகிறாள், மகன் டேனி தனியாக விளையாடிக்கொண்டு
இருக்கிறான். டேனிக்கு அவனது மூன்று சக்கர வண்டியில் ஹோட்டல் முழுவதும் சுற்றுவது தான் வழக்கம்.
அந்த
சமயத்தில் அந்த ஹோட்டலில் இறந்து போனதாக சொல்லப்படும்
இரு பெண் குழந்தைகளின்
உருவம் மற்றும் லிப்ட்-ல் இருந்து ரத்தம் ஆறு போல பாய்ந்து வருவது அடிக்கடி டேனிக்கு மட்டும் தெரிகிறது. அந்த ஹோட்டல் முழுவதும் அவன் மூன்று சக்கர வண்டியில் சுற்றுவதை மிக அழகாக ஒரு அதிர்வு கூட இல்லாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தப்படத்தில்
உள்ள மிகச்சிறந்த
காட்சிகளில்
ஒன்று இது.
சில
நாட்களுக்கு பிறகு ஜாக்கால் முன்பு போல எழுத முடியாமல், அமைதி, தூக்கம் இன்றி தவிக்கிறான்,மனைவியிடமும்
எரிந்து எரிந்து விழுகிறான். அவன் எழுதிகொண்டிருக்கும்
போது, தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவளை எச்சரிக்கிறான். ஜாக் திடீர் தீடிரென்று தூக்கத்தில்
கத்துகிறான்
யாரிடமும் பேசாமல் மனநிலைபாதிக்கப்பட்டவனை
போல் ஆகிறான்.
பனிப்பொழிவு
உச்சத்தை அடைகிறது, ஹோட்டலை விட்டு செல்ல முடியாதவாறு மிகக்கடுமையான
பனிப்பொழிவு. தொலைதொடர்பு
சாதனங்கள் வேலை செய்யாமல், அதனால் வெளி உலகத்துடனான
தொடர்பு முற்றிலும் இல்லாமல் போகிறது.
டேனிக்கு 237
-ம்
அறைக்கு சென்று பார்க்கவேண்டும்
என்ற ஆவல் வலுக்கிறது. அப்போது விளையாடிகொண்டிருக்கும்
டேனியை நோக்கி ஒரு பந்து 237
-ம்
அறையில் இருந்து வருகிறது. திறந்திருக்கும் அந்த அறையில் தனது அம்மா உள்ளே இருக்கிறாள் என்று நினைத்து உள்ளே செல்கிறான். சமையலைறையில்
வேலை செய்துக்கொண்டிருக்கும்
ஜாக்கின் மனைவி ஒரு அலறல் சத்தம் கேட்டு ஜாக்கிடம் ஓடி வருகிறாள், அவனிடம் என்னவென்று விசாரிக்கிறாள்,அதற்கு ஜாக், மனைவி மற்றும் மகனை கொலைசெய்வதாக
கனவு கண்டேன் என்று கூறுகிறான். அந்த சமயத்தில் அங்கு வரும் டேனியின் கழுத்தில் யாரோ அறைந்த காயத்தை ஜாக்கின் மனைவி பார்க்கிறாள்.
இருவரும்
இங்கு இருக்க டேனியை அறைந்தது யார்? என்று யோசிக்காமல் அதை செய்தது ஜாக் தான் என்று சந்தேகம் கொள்கிறாள், அதனால் அவனிடம் கோபித்துகொண்டு
அவளது அறைக்கு சென்று விடுகிறாள். அவன் எழுதும் இடத்திற்கு வரும் மனைவி அவன் எழுதியதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். "All
work and no play make Jack a dull boy" என்று திரும்ப திரும்ப இதே வரிகளை ஜாக் ஆயிரக்கணக்கான
பக்கங்களில்
டைப் செய்து வைத்திருக்கிறான்.
எழுதுகிறேன்
என்று கூறிவிட்டு, ஒரே ஒரு வரியை மட்டும் திரும்ப திரும்ப ஜாக் டைப் செய்வது ஏன்?
அவன்
உண்மையில் மனநிலை பதிக்கப்பட்டுள்ளனா? அல்லது அந்த ஹோட்டலில் உள்ள அமானுஷ்ய சக்திகள் அவனை ஆட்டி படைக்கின்றனவா?
உண்மையில்
டேனியை அறைந்தது யார்?
அந்த 237
-ம்
அறையில் அப்படி என்னதான் உள்ளது? இது போன்ற நிறைய புதிர்களுக்கான
பதில்களை இந்த முதுகெலும்பை
சில்லிட வைக்கும் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
தி ஷைனிங் (1980) ஆங்கில
திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க...
English Name : The Shining (1980)
Language : English
Country : United
States
Directed
By : StanleyKubrick
Wiki
Page For : The Shining (1980)
English
Reviews : TheShining (1980)
English
Reviews : TheShining (1980)
Tamil
Reviews : The Shining (1980)