PULP FICTION (1994) Tamil Review

கதை களம்.

ஒரு நிழல் உலக தாதாவின் உத்தரவின் பேரில் தாதாவை ஏமாத்தி சென்றவனை பிடிக்க செல்லும் இரண்டு அடியாட்களின் பயனங்கள்.
இதர்கிடையில் தாதாவும் அவரை யெமத்தி சென்ற்றவர்களிடன் சந்த்திப்பு, அவர்களின் ஆடு புலி ஆட்டமும். திரைக்கதை அசத்தல்.
கதை சுருக்கம்.
முதல் காட்சியில் பம்கின்னும் ஹனிபன்னியும் காபி கடையை கொள்ளையடிக்க திட்டமிடலுடன் ஆரம்பிக்கும் இப்படம் .. ஆரம்ப வசனங்கள்  யூதர்களை வறுத்தெடுக்கும். திடீரென முடிவுசெய்து ரெஸ்டாரண்டை கொள்ளையடிக்கும் முடிவு அசாத்தியமானது..
நிழல் உலக தாதா மார்சிலஸ் தன் மனைவி மியாவை தன் அடியாள் வின்சென்டிடம் தான் வெளியூர் போகும்போது அவளை வெளியில் அழைத்துச்செல்லும்படி பணிக்கிறான்..அதன்பிறகு வின்செண்டும், ஜூலிசும் தன் முதலாளியிடமிருந்து ப்ரெட் என்பவன் திருடிய முக்கியமான பெட்டியை மீட்டு வர அனுப்புகிறான்.அவன் தன் முதலாளி மார்சிலசால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட ஒரு ஆள். அப்படி போகும்போது வின்சென்ட் தன்னுடைய ஐரோப்பிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டே செல்வான், அப்போது ஜூலிஸ், வின்சென்டிடம் தன் முதலாளியின் மனைவியால் ஒருவன் நான்காம் மாடியில் இருந்து தள்ளப்பட்டான் எனவும். அதனை FOOT MASSAAGE என்றும் குறிப்பிடுவான்.. சிரிப்பை அடக்க முடியாது இந்த இடத்தில்.. இந்த சீனைதான் அப்படியே கன்வெர்ட் செய்து மணிரத்னம் தன் ஆய்த எழுத்து படத்தில் மாதவன் சூர்யாவை சுட போகும்போது தன் மனைவியை பற்றி பேசுவதாக மாற்றியிருப்பார்ஜூலிஸ்  பெட்டியை எடுக்கும் முன் பைபிளில் உள்ள வாசகத்தை பொறுமையாக சொல்வார். அப்போது பாத்ரூமில் ஒளிந்திருந்த ப்ரெட்டின் ஆள் விசென்டையும், ஜூலிசையும் சுட தப்பித்துக் கொண்ட இருவரும் அவனையும் தீர்ப்பார்கள். அப்போது ஜூலிஸ் வின்சென்டிடம் பாத்தியா கடவுள் நம் மீது பாயவிருந்த புல்லட்டை தடுத்து நிறுத்திவிட்டார் ஏன் பெருமைப்பட வின்சென்ட் அவன் குறிதவறி சுட்டான் அதான் என மறுக்க, ஜூலிசோ விடாப்பிடியாக கடவுள்தான் காப்பாற்றினார் என சண்டை போடுவார்.
ஜூலிசின் கடவுள் நம்பிக்கை அசாத்தியமான கிண்டலுடன் அவர் வரும் சீன் எல்லாம் இருக்கும்..ப்ரேட்டிடம் பெட்டியை மீட்டு இன்பார்மர் மார்வினின் காரில் தப்பி செல்லும்போது வின்சென்டின் துப்பாக்கி தவறுதலாக மார்வினை சுட்டுவிட மார்வினின் ரத்தமும் சதை துணுக்குகளும் இருவரின் மேலும் கார் முழுவதும் ஒட்டிக்கொள்ள ஜூலிஸ் தன் நண்பன் ஜிம்மியின் வீட்டிக்கு சென்று அவனின் உதவியைக் கேட்க ஜிம்மி பயந்து மறுப்பான் அப்போது மார்சிலஸ் வேண்டுகோளுக்கு இணங்கி வின்ஸ்டன் அந்தக் காரை சுத்தம் செய்தும் மார்வினின் உடலை ஒரு ட்ரன்க் பெட்டியும் மறைத்து வைப்பார்கள்.. 
அதன் பின் வின்செண்டும், ஜூலிசும் ஒரு ரெஸ்டாரன்டிற்கு செல்ல அதே ரெஸ்டாரன்டில்தான் படத்தின் ஆரம்ப காட்சியாக வரும் பம்கின்னும், ஹனிபன்னியும் அந்த ரெஸ்டாரன்டை கொள்ளையடிக்க திட்டமிடுவார்கள்.. படத்தின் இந்த காட்சியின் வசனங்கள் சூப்பர்.. இப்பல்லாம் வங்கிகளை கொள்ளையடிக்க முடிவதில்லை, செக்யூரிட்டிகளை கடுமையாக வைத்துவிட்டனர். யாருடைய பர்சையாவது அடிக்கலாம் என்றால் அதிலும் யாரும் பணம் வைத்துகொள்வதில்லை. இந்த யூதர்களை பார் எங்கு பார்த்தாலும் இப்படி கடை வைத்து சம்பாதிக்கின்றனர்.. ஒரு காப்பி ஐந்து டாலர் விற்கிறார்கள்.. இந்த மேனேஜர் இருக்கானே அவன் ஒரு வேலையும் செய்யாமல் சம்பாதிக்கிறான்..என பேச அவன் காதலி நீ பேசுவது வாத்து கத்துவதுபோல் இருக்கு என்று சொல்லுவாள்.. உடனே அவன் இந்த ரெஸ்டாரன்டையே கொள்ளையடிப்போம் என்பான்.. உடனே துப்பாக்கியை தூக்குவார்கள்..
அதற்க்கு சற்று முன்னதாக வின்சென்ட் டாய்லெட் போய்விட பம்ப்கின்னும், ஹனிபன்னியும் துப்பாக்கி முனையில் எல்லோரையும் மடக்கி, அனைவரின் பர்சையும் மிரட்டி வாங்குவார்கள்.. அப்படியே ஜூலிசிடம் அவன் பர்சை வாங்கிக்கொண்டு அவன் கையில் வைத்திருக்கும் முக்கியமான பெட்டியையும் கேட்க.. சடாரென தன் துப்பாக்கி முனையில்  பம்கின்னை மடக்க , அதற்குள் வின்செண்டும் வந்துவிட அப்போது கூட ஜூலிஸ் பம்ப்கின்னிடம் பைபிளின் வாசகத்தை பொறுமையாக சொல்லுவான்.. அதன்பின் அவனை அவன் கொள்ளையடித்த பணத்தோடு அனுப்பிவிடுவார்கள்..
வின்சென்ட் தன் முதலாளி மனைவி மியாவை வெளியில் கூட்டிச் செல்வதற்கு செல்லும் வழியில் தன் நண்பன் லான்ஸ் வீட்டிற்கு சென்று ஹை டோஸ் ஹெராயின் வாங்கிச் செல்வான்.மியாவுடன் 1950 டைப் ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு செல்வான், அங்கு சிறந்த ஜோடிகளுக்கான நடனப்போட்டி வைப்பார்கள் அதில் மியா வின்சென்ட்டை கட்டாயப் படுத்தி ஆடசெய்து பரிசை வெல்வாள். அப்போது நடக்கும் நடனம் அருமை. ஏற்கனவே இருவரும் மிகுந்த போதையில் இருப்பார்கள். மியாவை வீட்டிக்கு கூடிவந்து விட்டவுடன் வின்சென்ட் டாய்லெட் செல்வான் அங்கு மியாவிடம் இருந்து விடைபெற்று செலவதற்கு கண்ணாடிமுன் பேசிப் பழகுவான். அதற்குள் வின்சென்டின் கோட் பாக்கெட்டில் இருக்கும் ஹெராயின் மியாவின் கையில் கிடைக்க அதை அவள் கொக்கெயின் என நினைத்து மூக்கின் வழி உறிஞ்ச அது இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் பாதையில் சென்று அடைத்துக்கொள்ள அவள் மெல்ல மரணத்தை தழுவ ஆரம்பிப்பாள். வின்சென்ட் அவளை தூக்கிக் கொண்டு தன் நண்பன் லான்சின் வீட்டிற்கு காரை வேகமாக ஒட்டிசெல்வான், அங்கு அடிரிளின் மருந்தை ஊசியில் ஏற்றி அவள் மார்பில் நேரிடையாக குத்த, அதன் மூலம் அவள் பிழைப்பாள்.. படத்தில் இந்த சீன் நமக்கு பரபரப்பை ஏற்படுத்தும் முக்கியமான சீன்களில் ஒன்று அதன்பிறகு வின்சென்ட் மியாவை வீட்டில் விடும்போது நடந்த விசயங்களை மார்சிலசுக்கு தெரியப் படுத்த வேண்டாம் என்று சொல்வாள்.
பட்ச் ஒரு பாக்சர் அவன் தன் முதலாளி மார்சிலசிடம் தான் அடுத்த சண்டையில் பங்கேற்க போவதில்லை என்று சொல்கிறான். ஆனால் அடுத்த சண்டையில் பங்கேற்கும்போது எதிர் அணியிடம் பணம் வாங்கிகொண்டு தன் முதலாளி கட்டளைப்படி சண்டையில் தோற்காமல் எதிராளியை கொன்றுவிட்டு, எதிர் அணியினர் தந்த பணத்தை வாங்கிகொண்டு பாக்சர் பட்ச் தப்பித்து வரும்போது டாக்சியின் டிரைவரான பெண்ணுடன் பேசும் வசனங்களும்அதன்பின் தன் காதலி தங்கியுள்ள மோட்டல் வந்தவுடன் தன் இளம் மனைவியுடன் பேசும் வசனங்களும் எதார்த்தம்.. அப்போது ORAL SEX க்கு பிரியப்படும் மனைவியை அவர் திருப்தி படுத்துவதை அவள் முகத்தை மட்டும் காட்டி பிரமாதப் படுத்தி இருப்பார்.. அந்தபின் அவரின் மிக முக்கியமான தலைமுறைகளை கடந்த ஒரு கைகடிகாரத்தினை தன் காதலி மறந்துவிட்டு வந்ததை அறிந்து அவளை திட்டுவான்.. அவள் அழ. அவளை அப்படியே விட்டுவிட்டு நகரத்தை நோக்கி மீண்டும் வருவான்.
நகரத்தில் தன் வீட்டின் பின்புறமாக காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்து கடிகாரத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுமுன் சமையலறை சென்று டோஸ்டரில் பிரட்டை சொருகிவிட்டு காத்திருக்க அப்போது பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்கும், உசாரான பட்ச் சுற்றிலும் கவனிக்க அங்கு ஒரு மெசின் கண் இருக்கும், அதனை கையில் எடுத்துக் கொண்டு பாத்ரூமை குறிவைக்க, அங்கிருந்து பட்சை கொள்ள முதலாளி மார்சிலசால் அனுப்பப்பட்ட வின்சென்ட் வெளியே வர, அதே நேரம் டோஸ்டர் மணியடிக்க ஏதோ என்று பதட்டபட்ட பட்ச் வின்சென்ட்டை கொன்றுவிட்டு காரில் தப்பிக்கிறான்.காரில் பட்ச் வேகமாக வரும்போது சாலையைக் கடந்த முதலாளி மார்சிலசை பார்த்து பதட்டத்தில் அவனையும் மோதிவிட்டு தப்பிக்க முடியாது கார் சுவற்றில் மோதி பட்சிற்க்கும் அடிபட, தப்பிக்கும் பட்ச் அருகில் உள்ள கடைக்குள் நுழய அங்கும் விரட்டிவரும் மார்சிலசுக்கும், ஜூலிசுக்கும் சண்டை வருகிறது. இருவரையும் துப்பாக்கி முனையில் பிடித்து கட்டிபோடுகிறான் கடைக்காரன் மேனார்ட், தன் நண்பன் ஜெட் என்பவனை அழைத்து அவன் மார்சிலசை தனி அறைக்கு கூட்டிச்சென்று ரேப் (பின்புறம்தான்) செய்ய, தப்பிக்கும் பட்ச் முதலாளி மார்சிலசையும் காப்பாற்றுகிறான்.. மார்சிலஸ் பட்சை அவன் வழியில் போகச்சொல்லி அனுப்பிவிடுகிறான்..ஆனால் இரண்டு வாக்குறுதிகளை அவன் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்க்கிறான். முதலாவது: பட்ச் மீண்டும் லாஸ் எஞ்சலீசுக்கு வரக்கூடாது மற்றொன்று: தன்னை ரேப் செய்த விஷயத்தை அவன் யாரிடமும் சொல்லக் கூடாது என்பதையும்.ஹோட்டலுக்கு வந்த பட்ச் தன் காதலி பெபினியிடம் அவளைக் கடிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறான்..


 TAMIL WIKI PAGE : PULP FICTION (1994)


English Name                           : PULP FICTION (1994)

Language                                  : English

Country                                     : United States

Directed By                              : Quentin Tarantino

Wiki Page For                          : PULP FICTION (1994)

English Reviews                       : PULP FICTION (1994)

English Reviews                       : PULP FICTION (1994)

Tamil Reviews                         : PULP FICTION (1994)

Pulp Fiction - Official Trailer [1994]