The Reader (2008) tamil review



கதை களம்.
எல்லோருக்கும் சிறுவயதில் காதல் வந்திருக்கும், சிலருக்கு தன்னைவிட சிறுவயதினர் மீது வரும், சிலருக்கு தன்னை விட பெரியவர்கள் மீது வரும். அதை காதல்  என்று சொல்லுவதை விட இனக்கவர்ச்சி என்று சொல்வதே மிகச்சரியாக இருக்கும். இளம்
பிராயத்தில் தோன்றியிருந்தாலும் பசுமரத்தாணி போல மனதில் வேறூன்றியிருக்கும் அந்த நினைவுகள் காலத்துக்கும் அழியாது.ஒரு 36 வயது பெண்னிற்க்கும் 15 வயது பையனுக்குமான காதல் மற்றும் யூதர்கள் சிறைசாலயில் பட்ட அவல நிலமைகள்.
கதை சுருக்கம்.
1958-ஆம் ஆண்டு ஜேர்மனி-இரண்டாம் உலகயுத்ததை முடித்துக் கொண்டு அதன் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றது. இங்கே 36 வயதான Hanna’வுக்கும் (Kate Winslet), 15 வயதான Michael’க்கும் (David Kross) இடையில் ஆரம்பிக்கும் காதலைச் சித்தரிக்கின்றது படத்தின் முன்பகுதி. Hanna ஒரு பேரூந்து நடத்துணர் (ticket conductor). இவர் கிட்டதட்ட பாடசாலைப் பையனான Michael’ வழைத்துப் போடுகின்றார் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு பெரும்பாலும் உடலுறவு சம்பந்தப் பட்டது என்றாலும், அதில் இன்னுமொரு பெரும்பங்கு, Hanna’வின் வற்புறுத்தலில் பேரில், Michael அவளிற்கு புத்தகம் வாசித்து கதை சொல்வதில் போகினறது. மூக்குவரையில் காதலில் மூழ்கி இருக்கும் Michael, Hanna என்னசொன்னாலும் அதற்கு இணங்கிப் போகின்றான். இவர்களின் கள்ளத்தனமான் இந்த உறவு இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, Hanna’வுக்கு ஒரு அலுவலக வேலைக்கான பதவியுயர்வு வருகினறது. அத்துடன் திடீரென தலை மறைவாகிவிடுகின்றாள் Hanna!
மிகவும் மனமுடைந்து போகும் Michael கொஞ்சம், கொஞ்சமாக தெளிந்து பல்கலைக் கழகத்திற்குச் செல்கின்றான். அங்கு வக்கீல் துறையில் படிப்பைத் தொடர்கின்றான். இவனது பல்கலைக் கழக படிப்பின் ஒரு பகுதியாக ஒரு நீதிமன்ற வழக்கை பார்வையிடவேண்டி வருகின்றது. ஹிட்லர் காலத்தில் யூத மக்களை அடைத்து வைத்திருந்து படுகொலை செய்வதற்கு பெயர் பெற்ற ஒரு சிறைச்சாலை காவலாளிகள் மீது, அங்கிருந்து தப்பிய ஒரு பெண் போடும் வழக்கு. வழக்கைப் பார்வையிட செல்லும் Michael’ற்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது. அங்கே குற்றவாளி கூண்டில் இருக்கும் ஆறு பேரில் ஒருத்தி Hanna!
அதன் பின்னர் அந்த வழக்கில் இருந்து ஹனா விடுபட்டளா இல்லயா..? போன்ற பல புதிர்கள் விடுபடுகின்ற்றது. விமர்சனத்தை கிளிக் செய்து படித்து கொள்ளுங்கள்

English Name           :       The Reader (2008)Language                 :       EnglishCountry                    :       United StatesDirected By              :       Stephen DaldryWiki Page For          :       The Reader (2008)English Reviews       :       The Reader (2008)English Reviews       :       The Reader (2008)Tamil wiki Reviews   :       The Reader (2008)



இந்த ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....

தீ ரீடர் திரைப்பட விமர்சனம்