கதை களம்.
வெளி
நாட்டுக்கு வேலை தேடி போகும் பெண்களின் அவல நிலமைகள்.அவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள எடுக்கும் முனைப்புகள்.பாலியல் கொடுமைகள். இதிலிருந்து
தப்பி வரும் கதா நாயகி
கதை சுருக்கம்.
நாக்டு ஃபியர்
திரைப்படம் வெளிநாட்டுக்குப்
பிழைப்பு தேடி வரும் பெண் ஏமாற்றப்பட்டு
அவள் அனுபவிக்கும்
கொடுமைகளை நமக்குச் சொல்கிறது. இது சைக்கோ கில்லர்ஸ் வகையை சேர்ந்த திரைப்படம். சைக்கோ கொலைகாரர்கள்
படங்களை எக்கச்செக்கமாகவே
ஹாலிவுட் நமக்கு கொடுத்துவிட்டது
என்றாலும் இதன் சுவாரசியம் வேறு. ரோமம் சிலிர்த்து உடலை உரைய வைக்கும் திரைபட வரிசையில் இதை நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்.
படத்தின்
ஆரம்பமே ஒரு கொலையில் தொடங்குகிறது. நிர்வாணமாக ஒரு பெண் பொட்டல் காட்டில் ஓடி வருகிறாள். திடீரென ஒரு அம்பு அவள் நெஞ்சை துழைக்கிறது. அவள் அருகே வரும் ஒரு வேட்டையாடி அவள் தலையில் சுட்டு கணக்கை தீர்க்கிறான். படத்தின் கதை இந்த கொலையாளியின்
தளத்தில் பயணிக்கிறது. கதைக் களம் நடக்கும் இடம் மெக்சிக்கோ நாட்டின் ஒரு காட்டுப் பகுதியாகும். கொலை செய்பவனுக்கு
அந்தக் காட்டின் மூலை முடுக்கு எல்லாம் அத்துபடி. நீங்கள் எங்கு ஓடினாலும் கண்டுபிடித்துவிடுவான். செத்து போனவர்களை அங்கேயே குழி தோண்டி புதைத்தும் விடுவான்.
இப்படியான
சைக்கோ இருக்கும் மேக்சிக்கோ தேசத்திற்கு
வேலை நிமித்தம் வருகிறாள் டயானா எனும் பெண். அவள் ஒரு நடன மாது.அவளை அழைத்து வரும் ஏஜெண்ட் பாஸ்போட்டை பிடிங்கிக் கொண்டு ஒரு பாரில் வேலைக்கு சேர்த்து விடுகிறான். அன்று முதல் அவள் நம்பிக்கையில்
மண் வாரி இறைக்கப்படுகிறது. கிடைத்ததும்
அவள் விரும்பிய வேலை இல்லை. பாரில் அவளுக்கு ஆடை அவிழ்த்து நடனமாடும் வேலை கொடுக்கப்படுகிறது. புதுப் பெண் அழகாக இருக்கிறாளே
என பணத்தை வீசுகிறார்கள்
அங்குவரும் ’குடி’மக்கள். இருந்தும் மொத்தத்தில்
அவளுக்கு கிடைக்கும் கமிஷன் பணமோ மிக செற்பமாகவே உள்ளது.
ஏஜெண்டிடம்
இருந்து பாஸ்போட்டை மீட்டால் மட்டுமே அவளுக்கு அங்கிருந்து
விடுதலை கிடைக்கும். அங்கிருந்து
ஓடிவிடுவதும்
சுலபமான காரியம் இல்லை. ஏஜெண்ட் நிர்ணயித்து
இருக்கும் அவளின் கடனோ மிக அதிகம். எவ்வளவு சிரமப்பட்டு
பணத்தை சேர்த்தாலும்
கடனை அடைப்பது எட்டாக் கனியாக உள்ளது. டயான தங்கி இருக்கும் அறையில் அந்த பாரில் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணும் தங்கி இருக்கிறாள். நாம் வேலை செய்து கடனை அடைப்பது சாத்தியம் இல்லை. வேலை நேரம் போக இரவில் பாலியல் தொழிலில் செய்தால் கடனை சீக்கிரம் தீர்த்துவிடலாம்
என யோசனை கூறுகிறாள்.
டயானாவின்
போறத நேரம் அவள் சந்திக்கும்
முதல் கஷ்டமர் அந்த சைக்கோ கொலையாளி ஆவான். அவனும் வேட்டையாட ஒரு பெண்னை தேடி பிடிக்க வந்திருப்பான். அவனோடு காரில் போகும் டயானா பாதியில் மனம் மாறி இறங்கிக் கொள்ள நினைக்கையில்
படத்தின் மனித வேட்டையின் துரத்தல்கள்
ஆரம்பமாகிறது. அவளை வீட்டிற்கு கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து கால் விரல் இடுக்குகளில்
உள்ள சதையை கத்தரித்துவிடுகிறான். மயக்கம் தெளிந்து எழும் அவள் ஒரு காட்டின் நடுவே நிர்வாணமாக கிடக்கிறாள். எழுகையில் சதை பிய்ந்த கால்களில் வலி. அம்பு எய்ய தயாராக இருக்கிறான்
மனித வேட்டை செய்பவன்.
இதற்கிடையில்
அங்கு புதிதாக வந்திருக்கும்
காவல் அதிகாரி ஊரில் காணாமல் போவோரின் புகார்களை ஆய்வு செய்கிறார். காணாமல் போனவர்கள் பட்டியலில் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள், முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அதிகம் தொலைந்து போய் இருக்கிறார்கள். அவர்களை வேட்டையாடியவன்
ஊரில் மதிப்பும் மரியாதையும்
மிக்க நபர். யாருக்கும் அவன் ஒரு தொடர் கொலையாளி என்பதற்கான சந்தேகம் எழாதபடி தனது நிலையை தக்க வைத்து வந்தவனாவான்.
காட்டில்
பிறந்த மேனியாக தப்பி ஓடும் டயானா எப்படி தப்பித்தாள்
என்பதாக மீத கதை அமைகிறது.