Amadeus (1984) Tamil Review

கதை களம்.
பால்ய வயதிலே மிக சிறப்பாக இசை ஞானம் கொண்ட கதா நாயகனை கண்டு சமகால இசை வித்துவான் பொறாமை கொள்கிறான். அவனை
வீழ்த்த அவர் எடுக்கும் முயற்ச்சிகள், இறுதியில் ஒரு இசை கலைஞனை இங்கனம்

ஆக்கியதால் அவர் மனம் படும் பாடு, சம காலத்தில் தனது துரையில் தன்னை விட திரமை கொண்டுள்ளவன் மீது தன் மேலுள்ள இயலாமையால் வரும் கோபம்
கதை சுருக்கம்.
ஆஸ்திரியாவில் பிறந்து மூன்று வயதில் பியானோ வாசிக்க ஆரம்பித்த மொ[ட்]சார்ட் ஏழு வயதில் சிம்பொனி இசை அமைத்து பின் புயல் வேகத்தில் நூற்றுக்கணக்கான இசை கோர்வைகளை எழுதி வாழும் காலத்திலேயே பேரரசர்கள், ஆர்ச் பிஷப்கள் போன்றவர்களின் அபிமானத்தை பெற்று பெரும் புகழ் மட்டும் பெற்று தன் அந்திம காலத்தில் பணமில்லாமல் நோய் வாய்ப்பட்டு 35 ம் வயதில் மரணமடைந்தான். இன்றும் உலகெங்கும் அவன் இசை போற்றப்படுகிறது. 5 வயதில் மொ[ட்]சார்ட் இயற்றிய "Twinkle Twinkle Little Star" இன்றும் பள்ளி குழந்தைகளிடையே பிரபலம். தொலைக்காட்சிகளில் பிரபலமான "Titan" கைகடிகார விளம்பரத்தில் வரும் இசை மொ[ட்]சார்ட்டின் 25 ம் சிம்பொனி ஆகும்.

இப்படம் மொ[ட்]சார்ட்டின் மேதமையை அவரின் சம கால இசைக்கலைஞர் அன்டாணியோ சலியேரி பார்த்து பொறாமைப்படும் கோணத்தில் சொல்லப்படுகிறது.வயதான சலியேரி தான் மொ[ட்]சார்ட்டை கொன்று விட்டதாக புலம்பி தற்கொலைக்கு முயற்சிக்கும் போது காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரை அமைதிப்படுத்த வரும் பாதிரியாரை தவிர்க்க விரும்பி பாதிரியாரின் இசை புலமையை பரிசோதிக்கிறார். சலியேரி தான் இயற்றிய இரண்டு இசை கோர்வைகளை பாதிரியாரிடம் இசைத்து காண்பிக்கிறார். அவருக்கு அது பிடிபடவில்லை. பின்னர் மொ[ட்]சார்ட்டின் இசையை வாசிக்கும் போது பாதிரியார் இந்த இசை மிகவும் சிறந்தது என்றும் அதை தான் அறிந்திருப்பதாகவும் கூறுகிறார்.சலியேரி அது மொ[ட்]சார்ட்டின் இசை என்று கூறி கடந்த கால நினைவுகளில் லயிக்கிறார். Non-Linear முறையில் கதை சொல்லப்படுகிறது.

தன் பதின்ம வயதில், ஆறு வயதிலேயே புகழ் பெற்ற மொ[ட்]சார்ட்டை அறியும் சலியேரி இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு சிறந்த இசை கலைஞர் ஆக விரும்புகிறார். கட்டுப்பாடான தந்தை அதை தடுப்பதால் கடவுளிடம் வேண்டுகிறார். வயதான சலியேரி தான் சிறு வயதில் கடவுளிடம் வேண்டியதை கூறும் காட்சி இந்த படத்தில் சிறந்ததொரு காட்சி. தந்தையின் திடீர் மறைவிற்கு பின் வியன்னா வரும் சலியேரி இசை கலைஞராகி பேரரசர் இரண்டாம் ஜோசெப் பின் அரசவை இசை கலைஞர் ஆகிறார்.
ஒரு நாள் மொ[ட்]சார்ட் தன் புரவலர் salzburg ஆர்ச்பிஷப்பிற்கு இசைத்து காண்பிக்க வியன்னா வரும்போது சலியேரி அங்கு செல்கிறார். அங்கு காதலியுடன் சிறு பிள்ளைத்தனமாக விளையாடிக்கொண்டிருக்கும் மொ[ட்]சார்ட்டை காண்கிறார். மொ[ட்]சார்ட் இல்லாமல் இசை ஆரம்பிக்கும்போது அதுவரை இருந்த விளையாட்டுகுணம் திரும்பி கவனத்துடன் இசையை நடத்துகிறான். தன் மீது கோபத்துடன் இருக்கும் ஆர்ச்பிஷப்பிடம் வேலை செய்ய பிடிக்கவில்லை. இந்நிலையில் மொ[ட்]சார்ட் பற்றி கேள்விப்பட்டு பேரரசர் இரண்டாம் ஜோசப் அவனை அழைத்து வரசொல்கிறார். ஒபேரா எனப்படும் இசை நாடகம் எழுத சொல்கிறார் அரசர். அதை ஏற்றுக்கொள்ளும் மொ[ட்]சார்ட் சலியேரி எழுதிய இசையை இன்னும் சிறப்பாக இசைக்கிறான். சலியேரி மனதில் பொறாமை ஏற்ப்பட ஆரம்பிக்கிறது.

மொ[ட்]சார்ட்டின் இசை நாடகம் அரங்கேறி பெரும் வெற்றி அடைகிறது. காதலியை திருமணம் செய்து கொள்கிறான். அரண்மனையில் இசை ஆசிரியர் பதவிக்காக மொ[ட்]சார்டுக்கு தேர்வு வைத்ததால் கோபம் கொண்டு அந்த பதவியை உதறி தள்ளுகிறான். சலியேரிக்கு மொ[ட்]சார்ட்டின் மேதமை புரிகிறது. அவன் இசையை மனதிற்குள் ரசிக்கிறார். புகழ்கிறார். இது போல் தன்னால் இசை அமைக்க முடியவில்லை என கடவுள் மேல் கோபம் கொள்கிறார். அவன் எழுதிய இசை குறிப்புகள் ஒரு திருத்தம் கூட இல்லாமல் மனதில் இருந்து நேரடியாக எழுதப்படுவதை கண்டு உணர்ச்சி மேலோங்குகிறார். மொ[ட்]சார்ட்டின் இசை எழுதப்பட்ட பக்கங்கள் ஒவ்வொன்றாக திருப்பப்படும்போது பின்னணியில் மொ[ட்]சார்ட்டின் இசை ஒலிக்கிறது. மொ[ட்]சார்ட் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான்.

இசை நாடகம் எழுதுவதில் அரசருக்கும் மொ[ட்]சார்டுக்கும் கருத்து வேறுபாடு வர சலியேரி வழி செய்கிறார். ஒரு வழியாக நாடகம் வெற்றிகரமாக முடிகிறது.மொ[ட்]சார்ட் ஊதாரித்தனமாக செலவு செய்து மது பழக்கத்திற்கு அடிமையாகிறான்.

ஒரு நாள் இரவு தன் வீட்டு கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மொ[ட்]சார்ட் திறக்கிறான். முகமுடி அணிந்த ஒரு மனிதன் மொ[ட்]சார்ட் பற்றி வினவுகிறான். இறந்த ஒருவரின் ஆன்மா அமைதியடைய பாடப்படும் Requiem Mass எழுத பணித்து நிறைய பணம் கொடுக்கிறான். வெகு விரைவில் எழுத சொல்லி தெருவில் மறைகிறான். அடுத்த காட்சியில் வயதான சலியேரி தானே அந்த முகமுடி மனிதன் என்று பாதிரியாரிடம் கூறுகிறார். சலியேரியின் பொறாமை மொ[ட்]சார்ட் கொல்லவும் தூண்டுகிறது.பணம் கொடுத்து மேலும் குடிக்கு ஆளாக்கி மறை முகமாக கொல்ல திட்டமிடுகிறார். தொடர்ந்த உழைப்பால் மொ[ட்]சார்ட்இன் உடல் நலம் மேலும் கெடுகிறது. முகமுடி மனிதன் மீண்டும் வந்து மொ[ட்]சார்ட்ஐ துரிதப்படுத்துகிறான்.
இசை நாடகத்தின் போது விஷ காய்ச்சல் காரணமாக மயங்கி விழும் அவனை சலியேரி மொ[ட்]சார்ட்இன் வீட்டிற்கு தூக்கி வருகிறார். மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. விழித்த மொ[ட்]சார்ட் சலியேரி இடம் பிரச்சினையை சொல்கிறான். கதவை திறந்து பார்த்து வந்திருந்த மொ[ட்]சார்ட் இன் நண்பர்களை அனுப்பிவிட்டு , முகமுடி மனிதன் தான் வந்திருந்ததாகவும் நாளை காலைக்குள் எழுதி முடித்தால் மேலும் பணம் தருவதாகவும் பொய் சொல்கிறார். மரணப்படுக்கையில் இருக்கும் மொ[ட்]சார்ட் சலியேரியை தான் சொல்ல சொல்ல இசையை குறிப்பெடுக்க சொல்கிறான். அணையும் விளக்கின் பிரகாசம் போல் மகத்தான இசை அவனிடமிருந்து வெளிப்படுகிறது. அவன் வேகத்திற்கு சலியேரியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. பின்னணியில் பிரமாண்டமாக Requiem Mass ஒலிக்க அதிகாலையில் மொ[ட்]சார்ட் இறந்து போகிறான். அற்புதமான கிளைமாக்ஸ் காட்சி. வயதான காலத்தில் சலியேரி உணர்ச்சியால் வருந்தி அழுகிறார். கடவுளிடம் மன்னிக்க வேண்டுகிறார்...

இந்த அமெடியஸ் ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....

English Name              :    Amadeus (1984)Language                     :    EnglishCountry                         :    United StatesDirected By                  :    Milos FormanWiki Page For              :    Amadeus (1984)English Reviews         :    Amadeus (1984)English Reviews         :    Amadeus (1984)Tamil Reviews             :    Amadeus (1984)

AMADEUS (1984) - Official Movie Trailer