PROMETHEUS (2012) Tamil Review

கதை களம்.

சில விஞ்சானிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இருக்கும் சில குகை ஓவியங்களை பார்க்கிறார்கள். அவை இன்ன பிற ஓவியங்களுடன் ஒத்துப்போகிறமாதிரி இருப்பதால் மனிதர்களை
இன்னொரு வர்க்கத்தினர்தான் (வேற்றுகிரகத்தினர்) உருவாக்கியிருக்கிறார்கள், அவர்கள் வேறொரு கிரகத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பதாக முடிவுக்கு வந்து அவர்களை தேடி அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு குழு புறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பதை ஒரு ஓவியத்திலிருந்து ஆரம்பித்து கடைசியில் தனது ஏலியன் படத்தின் ஆரம்பமாய் முடித்திருக்கிறார் இயக்குனர்
கதை சுருக்கம்.
மிகச்சிறந்த் நடிப்புகள், மனித ரோபோக்களின் (ஹூமனாய்ட்) அனாயசமான யதார்த்தம் ததும்பும் நடிப்புகள், பிரமாண்டமான கதை களம், நிஜமா இல்லை அனிமேஷனில் உருவாக்கப்பட்டதா என் வியக்கும் காட்சி அமைப்புகளும், லொகேஷன்களும், என முழுக்க முழுக்க உங்களை கட்டாயம் இந்த படம் அசத்தும். இதுவரை நான் பார்த்த 3டி படங்களில் இந்த அளவுக்கு நம்மை உள்வாங்கி படத்துடன் ஒன்றவைக்கும் 3டி படம் வந்ததில்லை. முன் லேயரில் தெரியும் காட்சிகள் பிரகாசமானதாகவும் தூரம் செல்ல செல்ல காட்சிகளின் நிறம் (கிரேடிங்) மாற்றி இருப்பதும் டெக்னிக்கலாய் மைல்கல்.
ஏலியன் படங்களில் ஏலியன்களை உருவாக்கிய எங்கள் ஜாதி, ஓவியர் ஜிகெர் (H.R. Giger) இதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். இவரின் கற்ப்பனைதிறனில் உருவாக்கிய ஓவியம்தான் இந்த கதைக்கு தூண்.ஓவியர் என்கிற முறையில் பெருமைகொள்கிறேன்.
நூறு சதவீத படம் விண்வெளியிலும் மற்ற கிரகத்திலும் நடப்பதால் எது உண்மையான லொகேஷன், எது ஆர்ட் டைரக்க்ஷன் அல்லது மேட் பெயிண்டிங் என்பதை கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்.
முக்கியமாக குழுவின் தலைவியாக வரும் கதாநாயகியின் நடிப்பு என்ன சொல்வது. வார்த்தைகள் இல்லை. ஒரு காட்சியில் தன் வயிற்றுக்குள் இருக்கும் ஏலியனை தன்னைத்தானே அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் காட்சியில் யாருமே அவள் அரை குறை ஆடையுடன் இருப்பதை மறந்து ஒன்றிப்போகும் காட்சி ஒன்று போதும் அவளின் நடிப்புக்கு.
ஹூமனாய்ட் ஆக இரண்டு கதா பாத்திரங்கள் முழுக்க ரோபோவாகவும் இல்லாமல், மனிதர்களாகவும் இல்லாமல் மனித ரோபாக்களாய் நடித்திருப்பது.நடிப்பின் உச்சம். காரணம்... அதிக முகபாவங்கள் இல்லாமல் கதைக்கு தேவையான முக்கியமான பாத்திரங்களை சரியாக செய்திருப்பதே அதற்க்கு காரணம்.
துவக்க காட்சியின் பிரமாண்டம், விண்கலன்களின் வடிவமைப்பு, காஸ்ட்யூம், நிகழும் இடம் என அனைத்துமே டைரக்டரின் அசாத்திய திறமைக்கு சான்று.படத்தில் பிண்ணனி இசையும், சினிமாட்டோகிராஃபியும் இரண்டு கண்கள்.
படத்தில் காமெடி இல்லை, குழப்பமான பல டையலாக்குகள் இல்லை, மயிர் கூச்செரியும் ஆக்க்ஷன் இல்லை ஆனாலும் உங்களை சீட்டின் நுனியில் உட்காரவைக்கிற படம்..
  1. ஃபுரமோத்தியஸ் (2012)
  2. ஃபுரமோத்தியஸ் (2012)
  3. ஃபுரமோத்தியஸ் (2012)
  4. ஃபுரமோத்தியஸ் (2012)

English Name         :    PROMETHEUS (2012)
Language                :    English
Country                    :    United States
Directed By             :    Ridley Scott
Wiki Page For         :    PROMETHEUS (2012)
English Reviews    :    PROMETHEUS (2012)
English Reviews    :    PROMETHEUS (2012)
Tamil Reviews        :    PROMETHEUS (2012)

PROMETHEUS Trailer 2 - 2012 Movie - Official [HD]