எதிரிகளின்
ராணுவ முகாமில் தனியாக மாட்டிகொள்ளூம்
போர் வீரன் எப்படி அவர்களிடம் இருந்து அமேரிக்க படைகளிடம் வந்து சேர்கிறான்
எனபதை விறுவிறுப்புடன் சொல்லியிருகிறார்கள்
எனபதை விறுவிறுப்புடன் சொல்லியிருகிறார்கள்
கதை சுருக்கம்.
போஸ்னியாவில்
சண்டை முடிந்த நேரம்......அமெரிக்க போர்க்கப்பலில்
இருக்கும் விமானிகள் இரண்டு பேருக்கு ஒரு அசெயின்மென்ட்
தர படுகின்றது... அதாவது போஸ்னியாவில்
போர் முடிந்ததும்
வேவு பார்க்க இரண்டு விமானிகளுடன்
ஒரு ஜெட் விமானம், அமெரிக்க போர்கப்பலில்
இருந்து அனுப்பி வைக்கபடுகின்றது.... அந்த மிஷனுக்கு அட்மிரல் லெஸ்லி(Gene
Hackman) இருக்கின்றார்.....போஸ்னியாவில்
விமானங்கள் பறக்க தடை செய்ய பட்ட பகுதியில் விமானத்தை செலுத்தி தரையில் இருக்கும் இராணுவ நிலவரங்களையும், அவர்கள் புரிந்த குற்றங்களையும்
புகைபடம் எடுப்பதுதான்
மிஷனின் நோக்கம்....இதில் கிரிஸ்(Owen
Wilson) மற்றும்
அவரது நண்பரும் அந்த ஜெட் விமானத்தில்
பறந்தபடி புகைபடம் எடுக்கின்றனர்... அனால் அவர்களுக்கு
தெரியாது.. ஒரு முஸ்லீம் குழுவினரை ஈவு இரக்கம் இல்லாமல்,இன அழிப்பையும்
புகைபடமாக எடுத்தது அவர்களுக்கே
தெரியாது... அவர்கள் புகைபடம் எடுக்கும் போது போஸ்னியாவின்
ஏவுகனை அவர்கள் பயணித்த ஜெட் விமானத்தை துளைக்க... உயிர் தப்பிக்க பராசூட்டில்
இரண்டு விமானிகளும்
குதிக்கின்றனர்... கிரிஸ் நண்பன் எதிரிகளிடம்
சிக்க...
ஒரு
தோட்டாவை அவன் தலைக்கு கொடுத்து பரலோகத்தில்
இருக்கும் பிதாவை தரிசிக்க அனுப்பி வைக்கின்றனர்... கிரிஸ் இந்த சம்பவத்தை பார்த்து விடுகின்றான்.. உயிர் தப்பிக்க வேண்டும்.... அமெரிக்கா உலக நாடுகளிடம் உதவி கோரமுடியாத நிலை...கிரிஸ் தான் எங்கு இருக்கின்றோம்
என்ற தகவல் தெரிவித்தாலும்
அந்த பகுதியில் வந்து மீட்பத சாத்தியம் இல்லாத நிலை.... புரியாத நிலபரப்பு??, எதிரி யார் நண்பன்யார்? எதுவும் தெரியாது... எந்த பக்கம் போக வேண்டும், அதுவும் தெரியாது? எப்படி உதவிக்கு வருவார்கள்? அதுவும் தெரியாது...இப்படி நிறைய யாதுக்கள் அடிக்கி கொண்டே போகும் போது... பக்கத்தில் இரண்டு கிலோ மீட்டர் துரத்தில் கொல்ல துடிக்கும் எதிரி ராணுவம் இருக்க.....கிரிஸ் எப்படி தப்பிக்கின்றான்?