கதை களம்.
துருக்கி, ஈரான், ஈராக் ஆகிய
மூன்று நாடுகளுக்குள்ளும் நடக்கும் யுத்ததினால் சிதறுண்டு அல்லற்படுகிற மக்களுடைய வாழ்க்கை
தான் குர்திஸ்(Kurdish) மக்களுடைய வாழ்க்கை.
அகதிகளாக சிருவர் மற்றும் பெண்களின் அவல நிலைமைகள்
அகதிகளாக சிருவர் மற்றும் பெண்களின் அவல நிலைமைகள்
கதை சுருக்கம்.
அக்ரின்(Agrin), ரெஹா, ஹென்கோர்(Henkov), பசோ, சற்றலைற்
என்று பதினைந்து வயதிற்குட்ட சிறுவர்கள் தான் அவருடைய Turtles Can Fly திரைப்படத்தின்
கதாபாத்திரங்கள். அவர்கள் எல்லோரும் அகதிகள். அங்குள்ள முகாம்களில் வசிப்பவர்கள். பன்னிரண்டு
அல்லது பதின்மூன்று வயதேயான சிறுமி அக்ரின், ரெஹா என்கிற குழந்தையை எப்போதும் முதுகில்
சுமந்து திரிபவள். அவளுடைய சகோதரன் ஹென்கோர் இரண்டு கைகளையும் போரில் இழந்தவன். அவர்களுடைய
தாயையும் தந்தையையும் போர் காவுகொண்டு விட்டது.
சற்றலைற் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவன் தான் அங்குள்ளவர்களில் வயது கூடியவன்(Soran Ebrahim stars as Satellite) பல விடயங்களை அறிந்தவன் மற்றும் அறிந்ததாகக் காட்டியும் கொள்பவன்.( இதனால் தொழிநுட்ப உபகரணத்தின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறான்)
போரைப்பற்றிய செய்திகளை அறிய அன்ரனாவுடனான தொலைக்காட்சி போதாது என்று சொல்லி ஒவ்வொரு அகதிமுகாமிலும் சற்றலைற் டிஸ் வாங்கச் சொல்லி அறிவுறுத்துபவன். அதனைப் பூட்டிக் கொடுக்கும் தொழில்நுட்பம் அறிந்தவன். அதனாலேயே அவன் சொந்தப் பெயர் மறைந்து சற்றலைட் என்று அறியப்படுபவன். அவனுக்குத் துணையாக இரு சிறுவர்கள். ஒருவன், ஒரு காலைக் கண்ணிவெடியில் இழந்த பசோ. ஊன்றுகோலே அவனது மறுகால். மற்றையவன் எட்டோ ஒன்பதோ வயதான சிறுவன். இவர்களோடு ஒரு சிறுவர் பட்டாளம்.
சற்றலைற் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவன் தான் அங்குள்ளவர்களில் வயது கூடியவன்(Soran Ebrahim stars as Satellite) பல விடயங்களை அறிந்தவன் மற்றும் அறிந்ததாகக் காட்டியும் கொள்பவன்.( இதனால் தொழிநுட்ப உபகரணத்தின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறான்)
போரைப்பற்றிய செய்திகளை அறிய அன்ரனாவுடனான தொலைக்காட்சி போதாது என்று சொல்லி ஒவ்வொரு அகதிமுகாமிலும் சற்றலைற் டிஸ் வாங்கச் சொல்லி அறிவுறுத்துபவன். அதனைப் பூட்டிக் கொடுக்கும் தொழில்நுட்பம் அறிந்தவன். அதனாலேயே அவன் சொந்தப் பெயர் மறைந்து சற்றலைட் என்று அறியப்படுபவன். அவனுக்குத் துணையாக இரு சிறுவர்கள். ஒருவன், ஒரு காலைக் கண்ணிவெடியில் இழந்த பசோ. ஊன்றுகோலே அவனது மறுகால். மற்றையவன் எட்டோ ஒன்பதோ வயதான சிறுவன். இவர்களோடு ஒரு சிறுவர் பட்டாளம்.
இவர்கள் தமது வாழ்க்கையை எப்படி
வாழ்கிறார்கள்? அகதி முகாமில் தருகிற அற்ப நிவாரணத்தைத்தவிர எப்படி அவர்கள் உழைக்கிறார்கள்?
சிறுவர் உழைப்பைப் பற்றியும், சிறுவர் உரிமைகளைப் பற்றியும் பேசும் அரச சார்பற்ற நிறுவனங்களின்
தலைமையகங்கள் இருக்கும் நாடுகளினால் விற்கப்பட்டு, போரில் ஈடுபடும் நாடுகளினால் அந்தப்பிரதேசங்களில்
புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை எடுத்து விற்கிறார்கள். கண்ணிவெடிகளை எடுப்பதற்கு சிறுவர்களைக்
குழுக்குழுவாகப் பிரித்துவிடுவது, அவர்கள் எடுத்துவரும் கண்ணிவெடிகளை விற்றுக் கொடுப்பது
என்று எல்லாவற்றையும் எல்லாமும் அறிந்த சற்றலைற்றே செய்கிறான்.
ஆப்பிள் பழங்களைப் பொறுக்குவதற்கு
முதுகில் கூடையைச் சுமந்து செல்வது போல காலையில் இந்தச் சிறுவர்கள் முதுகில் கூடை சுமந்து
செல்கிறார்கள் கண்ணிவெடி அகற்றுவதற்காக…
எவ்வளவு காலம் குர்திஸ்தானில்
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தது என்று தெரியாது. எனது தாயார், பாட்டி போன்றவர்கள்
இதைப் பற்றிப் பல கதைகள் கூறியுள்ளனர். கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில்
இருந்தே குர்திஸ்தான் ஒரு கண்ணிவெடி விதைப்புப் பிராந்தியமாக இருந்து வருகிறது. அமெரிக்க,
ஐரோப்பிய ஆயுத உற்பத்தியாளர்கள் அவற்றைச் சர்வாதிகாரிகளாகிய சதாம் போன்றோருக்கு விற்றதன்
விளைவே அவை. இவை அகற்றப்பட்ட பூமியாக குர்திஸ்தான் மாற நீண்ட காலம் எடுக்குமென நான்
நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்தியாலமும் அப்பாவி ஏழைகள் கண்ணிவெடிகளுக்கு
இலக்காகி கொல்லப்பட்டோ, முடமாக்கப்பட்டோ வருகிறார்கள் என்று இத்திரைப்படத்தின் நெறியாளரான
பக்மன் ஹோபாடி ஒரு நேர்காணலில் கூறுகிறார்.
படத்தில் இன்னொரு விடயம் முக்கிய
இடம் பிடிக்கிறது. அது தான் ஊடகங்கள். அதுவும் தொலைக்காட்சிகள். முகாம்களில் வாழும்
குர்திஸ் மக்கள் போரைப்பற்றிய செய்திகளை அறிவதற்கு தொலைக்காட்சிகளையே நம்பி இருக்கிறார்கள்.
ஆனால் தொலைக்காட்சியில் அவர்களுடைய மொழியில் செய்திகள் இல்லை. அவர்களுக்குப் புரியாத
மொழியான ஆங்கிலத்தில் தான் செய்திகள் வருகின்றன. அவர்கள் மிகச்சிரமப்பட்டு பணம் சேர்த்து
வாங்கிப் பூட்டும் சற்றலைட் டிஸ் கூட அவர்களுக்கான செய்தியையோ, அவர்களுடைய பிரதேசம்
பற்றிய செய்தியையோ தருவதில்லை. ஆனாலும் தொலைக்காட்சி முன் காத்திருக்கிறார்கள். நவீன
தொழில் நுட்பம் அவர்களைக் காத்திருக்க வைத்திருக்கிறது. அது அவர்களுக்கானதாக இல்லை.
அவர்களிடமிருந்து பணம் பிடுங்குவதானதாக மட்டுமே உள்ளது என்பதை மிக அழகாக திரைப்படத்தில்
கொணர்ந்திருக்கிறார் பக்மன் ஹோபாடி.
ஆனால் படத்தின் மையம் கண்ணிவெடிகளோ
ஊடகங்களோ அல்ல. அந்தப் பதின்ம வயதுச்சிறுமி. அவள் காவிக்கொண்டு திரிகிற அந்தக் குழந்தை.
அது அவளுடைய குழந்தையா என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை. அவள் ஒரு போது அந்தக் குழந்தையிடம்
அன்பு பாராட்டுகிறாள். உணவூட்டுகிறாள். தாலாட்டுகிறாள். இன்னொரு கணமோ தன்னுடைய குடும்பத்தையும்,
தன்னுடைய வாழ்க்கையையும் அழிக்க வந்து சேர்ந்த ஒன்று என அதனைத் திட்டுகிறாள். அதனை
இரத்தக்காயம் வருமளவுக்கு அடிக்கவும் செய்கிறாள். இது ஏன்?படத்தின் ஆரம்பக்காட்சியின்
போதே மலைப்பாங்கான அப்பிரதேசத்தின் மலைமீது ஏறி குதித்து தற்கொலை செய்கிறாள் அக்ரின்
என்ற அந்தச் சிறுமி. காட்சி பின்னகர்ந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறது.
ஒருமுறை நள்ளிரவில் முகாமை
விட்டு வெளியேறி சற்றுச் தொலைவிலுள்ள குளத்தில் இறங்குகிறாள். தன்னுடன் எடுத்து வந்த
மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தனது துப்பட்டாவில் நெருப்பைப் பற்ற வைக்கிறாள். குளத்தின்
கரையில் நின்று குழந்தை அம்மா என்று அழைக்கிறது. ஒரு கணம் ஒரே கணத்தில் நீரில் அமிழ்ந்து
தன்னைச் சுற்றிப் படர்ந்த தீயை அணைத்துவிட்டு லாம்பையும் தூக்கிக் கொண்டு முகாமுக்கு
விரைகிறாள். அங்கு குழந்தை சகோதரனுடன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது.
அவளுடைய தாய் தந்தையரைக் கொன்ற, அவளுடைய குடியிருப்புக்கு
நெருப்பு வைத்த, அவளுடைய சுற்றத்தை கொன்றொழித்த, அவளை நிர்க்கதியாக்கிய, அவளைச் சின்னாபின்னமாக்கிய
படையினரின் குழந்தை.
அது அவளுடைய குழந்தையா?
அது அவளுடைய குழந்தையா?
அமெரிக்க ஈராக் யுத்தத்திற்கு
சில காலங்களுக்கு முன் ஆரம்பமான திரைப்படம், அமெரிக்காவின் வருகையுடன் முடிவடைகிறது.
குர்திஸினுள் அமெரிக்க இராணுவம் வருகிறது. ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா மீது ஈர்ப்புக்
கொண்ட சற்றலைட் ஒரு போது குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்கக் கண்ணிவெடியிலேயே
தனது ஒரு காலை இழக்கிறான். அமெரிக்கப் படைகளின் வரவு அவனுக்கு சுவாரசியமற்றதாகி விடுகிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் தெருவில் அமெரிக்கப்படைகள் அணிவகுத்து வருவர். அதற்கு எதிர்த்திசையில்
சற்றலைற் தனது ஊன்றுகோலுடன் நடந்து கொண்டே இருப்பான். மணிதர்சா ( கு.த.செ)
English Name : Turtles
Can Fly (2004)
Language : English
Country : United States
Directed By : Bahman Ghobadi
Wiki Page For : TurtlesCan Fly (2004)
English Reviews : TurtlesCan Fly (2004)
English Reviews : Turtles Can Fly (2004))
Tamil Reviews : TurtlesCan Fly (2004)
Tamil Reviews : Turtles Can Fly (2004)
Tamil Reviews : Turtles Can Fly (2004)
Tamil Reviews : Turtles Can Fly (2004)
Turtles can Fly - Trailer