L.A. Confidential (1997)

கதைகளம்.

திரைப்படம் மூன்று காவலதிகாரிகளை முக்கிய கதாப்பாத்திரங்களாக கொண்டு லாஸ் ஏஞ்சல்ஷில் நடைபெற்ற ஒரு கொலை நிகழ்வினை மூவரின் வெவ்வேறான பார்வையில் 1950 -களின் பின்னணியில் ஆராய்கிறது.

கதை சுருக்கம்.

ஒரு இரவு லாஸ் ஏஞ்சல்ஷில் உள்ள ஒரு தேநீர் விடுதியில் கிட்டத்தட்ட ஒரு பெண் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டு கிடப்பது தெரிந்து எட்மன்ட் சம்பவ இடத்திற்கு வருகிறான்.  அதில் ஓரிரு மேசிக்கன் (Maxican) குற்றவாளிகளை நிறவெறியினால் அடித்த காரணத்திற்காக தன்னால் சாட்சி சொல்லப்பட்டு அன்று வேலையிழந்த பட் ஒய்ட்டின் நண்பன் டிக் ஷ்டன்ஷ்லேன்டின் (Graham Beckel) சடலத்தையும் கொல்லப்பட்ட சடலங்களுடன் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறான். பின்னர் அவன் தலைமையில் அந்த கொலைகளை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

பட் ஒயிட், தன் நண்பன் கொலையானது அறிந்து, அதே கேஷினை தனக்கு தெரிந்த கொலையான பெண்ணின் விவரங்களுடன் புலனாய்கிறான். அந்த பெண்ணின் விவரங்கள் மற்றும் அவளது தொடர்புகள், லென் ப்ராகன் (Kim Basigner) என்ற ஒரு விபசாரியினிடம் அவனை கொண்டு செல்கிறது. அவள் மூலமாக பட், அவள் மற்றும் கொலையான பெண் போன்ற பல பெண்கள் நடிகைகள் போல தங்கள் வடிவத்தினை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுவது அறிகிறான். இதற்கு பின்னணியில் இருப்பது லாஸ் ஏஞ்சல்ஷில் உள்ள மிக பெரிய பணக்காரன் பியர்ஸ் ப்ராச்சட் (David Strathairn) என்பதும் அவனுக்கு தெரிய வருகிறது. இவ்வழக்கு விசாரணையில், பட், லென்னுடன் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்திருந்தான்.  

அதே நேரம், எட்மன்ட் அந்த தேநீர் விடுதியில் சம்பவம் நடந்த அன்று வெகு நேரம் நின்றிருந்த ஒரு காரின் அடையாளங்களை அங்கிருந்தவர்கள் மூலம் அறிந்து கொள்கிறான். அவன், அந்த காரின் மூலம் விசாரித்ததில், சிறு சிறு களவுகள் செய்யும் மூன்று நீக்ரோ இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவன் கொடுத்த வாக்கு மூலத்தில், அவர்கள் மூவரும், அந்த தேநீர் விடுதியினை கொள்ளையடிப்பதற்காக முயன்ற பொழுது அவ்விடுதியின் காசாளர் தன் துப்பாக்கியை அவர்கள் நோக்கி சுட முயல வேறு வழியின்றி தாங்கள் அவனை சுட்டதாகவும், அந்த அமளிதுமளியில் சிலரை சுட நேர்ந்ததாகவும் கூறபட்டிருந்தது. பிறகு, அவர்கள் சிறையிலிருந்து  தப்பித்து ஒரு லாட்ஜில் தஞ்சமடைகின்றனர். இதனை எட்மன்ட் உளவறிந்து, அவர்களை அங்கே என்கொவுண்டர் செய்து கொலை செய்கிறான். இவ்வாறாக இந்த வழக்கு முடிய, இதில் பெரும்பகுதி உண்மைகளை கண்டுபிடித்த என்மன்ட்டிற்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.



  • English Name      :        L.A. Confidential (1997)
  • Language             :        English
  • Country                :        United States
  • Directed By          :        Curtis Hanson
  • Wiki Page For      :        L.A. Confidential (1997)
  • English Reviews  :        L.A. Confidential (1997)
  • English Reviews  :        L.A. Confidential (1997)
  • Tamil Reviews     :        L.A. Confidential (1997) 
  • எல்.ஏ. கான்ஃபிடென்ஷியல்திரைப்பட விமர்சனம் 





இந்த ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க.... 

TRAILER