CATCH ME IF YOU CAN (2002) Tamil Review

கதை களம்.

ஒரு சின்னப்பையன் முதல்ல வீட்டை விட்டு ஓடி வந்து பைலட்டாகி, அப்புறம் போலிஸ் நெருங்கறத தெரிஞ்சுகிட்டு டாக்டராகி, நர்ஸ் அ உஷார் பன்னி, அதுக்காக அப்புறம் வக்கிலாகி என்னென்னலாம்
வித்தை காட்டுரறான் அப்படிங்கிரதுதான் கதை

கதை சுருக்கம்.

ஃப்ராங்க், அதிபுத்திசாலியான 16 வயசு பையன், நல்லா வாழ்ந்துட்டு இருந்த அவங்க குடும்பம் பொருளாதார ரீதியா பாதிக்கப் படுது, வீடு மாறுறாங்க, இருந்தாலும் எப்பவும் சுவாரசியமான விசயங்களை செய்யற அப்பாவால பையன் ஃபிராங்க் நல்லாதான் வாழ்க்கை போகுதுனு நம்பறான். அவங்கம்மா அவங்கப்பாக்கு செய்யற துரோகத்தை தெரிஞ்ச பின்னாடி எல்லாமே மாறுது, ஒரு நாள் முடிவுக்கு வர்ர குடும்ப பிரச்சனை, விவாகரத்துல நிக்குது, அதுக்கப்பறம் யார்கூட வாழ பிரியப்படறங்கற கேள்விக்கு யோசிக்க சொல்லி தனியா விட படற ஃபிராங்க் அங்க இருந்து ஓடிப்போறான்.
ட்ரெய்ன் டிக்கெட்டுக்காக முதல் தடவையா போலி செக் கொடுக்கறான், ஊரை விட்டு வந்தவனுக்கு தங்க இடம் இல்லை, எந்த ஹோட்டல்லயும் முகம் தெரியாத சின்னப் பையங்கறதால அவனோட செக்க எடுத்துக்க மாட்டேங்கறாங்க, அந்த நேரத்துல ஒரு பெரிய ஹோட்டல்ல தங்கப்போற பைலட்க்கு கிடைக்கற உபசரிப்ப பார்த்துட்டு பைலட்டா வேஷம் போடறான், சும்மா ஒரு வரில சொன்னாலும் அதுக்காக அவன் மெனக்கெடறது ரொம்ப..
பைலட்டா மாறி ஏர்போர்ட் போய் ஃபிளைட்ல ஓசில போய்ட்டு வந்தாலும் அவனோடா கவனம்லாம் போலி செக் தயாரிக்கறதலாதான் இருக்கு, வெறுமனே செக் தயாரிக்கறதுல்ல மட்டும் இல்லாம அதை உபயோகப்படுத்தற இடத்துல அவனோட ஸ்டைலான நடிப்பு, சும்மா பின்றான்.
இன்னொரு பக்கம் அவனை ஒவ்வொரு ஸ்டெப்பா பின்தொடர்ந்து வந்துகிட்டு இருக்க FBI ஆபிசர் டாம், அவரும் புத்திசாலித்தனமா அவனை நெருங்கி அவன் தங்கி இருக்க இடத்துக்கு வந்து அர்ரெஸ்ட் பன்ற நேரத்துல படம் வேகம் பிடிக்குது, இந்த இடத்துல வர்ர காட்சியமைப்ப நீங்க பல படங்கள்ள பார்த்துருக்கலாம்.

இந்த கேட்ச் மீ இஃப் யு கேன் ஆங்கில திரைப்படத்தின் விமர்சனங்களை தமிழில் படிக்க....



English Name     : CATCH ME IF YOU CAN (2002)

Language           : English

Country             : United States

Directed By       :  Steven Spielberg

Wiki Page For   : CATCH ME IF YOU CAN (2002)

English Reviews : CATCH ME IF YOU CAN (2002)

English Reviews : CATCH ME IF YOU CAN (2002)

Tamil Reviews    : CATCH ME IF YOU CAN (2002)


Catch Me If You Can - Official Trailer [HD]