Never Let Me Go (2010) Tamil Review

கதை களம்.

முக்கோண காதலில் சிக்கி கொள்ளும் மூவர் தாங்கள் உடல் தானம் செய்வதர்காக படைக்க பட்ட குளோன்கள் என்று தெரிய வருகிறார்க்ள்.
இறப்பதற்க்காகவெ படைக்கபட்ட குளோன்களின் உண்வுர்களும் காதலும்.
கதை சுருக்கம்.
நெவர் லெட் மீ கோ (Never Let Me Go) திரைப்படம், உலக இலக்கிய விருதுகளில் மிக உயரிய விருதான, புக்கர் விருதை (Booker Prize) பெற்ற,  ஹாசு இஷிகாரோ (Kazuo Ishiguro) அவர்களின் நாவலினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலும் புக்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டைம் (Time) நாளிதழ் கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்களுல் ஒன்றாக இதனை அறிவித்து பாராட்டியது.
இருபத்தெட்டு வயதான கேதி ஹெச் (Kathy H), தன் பள்ளி நினைவுகளை விவரிக்கும் விதமாக திரைப்படம் துவங்குகிறதுகேதி, ஹெயில்ஷம் (Heilsham Boarding School) என்ற  விடுதிப் பாடசாலையில் தன் தோழி ரூத் (Ruth) உடன் படித்து வருகிறாள். கேதி மிகவும் நிதானமான பெண். எந்த ஒரு குற்றத்திற்கும் பின்னும் உள்ள குற்றவாளியின் மண தூண்டுதலை புரிய முயர்ச்சிப்பவள். வாழ்க்கையில் பெரிய கனவுகள் ஏதும் இன்றி வாழ்க்கை தருபவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு வாழ்பவள். மாறாக, ரூத் மற்றவர்களை அதிகாரம் செய்பவள். வாழ்க்கையில் தான் நினைத்த அனைத்தும் நடக்கும் என நினைத்து கனவுலகில் மிதப்பவள். தன் சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்தி கொள்பவள்.
ஹெயில்ஷம் பள்ளி அவர்களை சிறைபடுத்தியிருந்தது. அங்கு படிக்கும் மாணவர்களை வெளியுலக தொடர்பில்லாது வைத்திருந்தது. ஒருநாள், கேதியின் வகுப்பு மாணவன்  டாமி (tommy), பிற மாணவர்களால் இகழப்படுவதை கண்டு கேதி அவனுக்கு உதவ அவனிடம் செல்கிறாள். டாமி அவர்கள் மேலுள்ள கோபத்தில் இவளை அறைந்து விடுகிறான். இதற்கு பின்னும் கேதி அவனுடன் அன்புடன் பழகுகிறாள். டாமிக்கும் கேதியின் நட்பு பிடித்திருந்தது. அவளது நட்பு அவனை மற்றவர்களின் இகழ்ச்சிகளை இயல்பாக எடுத்துகொள்ள செய்தது. கேதி மற்றும் டாமி நட்புடன் பழகுவது மெல்ல காதலாக மாறுவதை ரூத்தால் உணர முடிந்தது. ரூத் கேதியின் புதிய காதலை கண்டு பொறாமையடைந்து அவனை தன்வசம் வர செய்ய, அவனிடம் அவனை தான் காதலிப்பதாக தெரிவித்து டாமியை தன் காதலனாக்கி கொண்டாள். டாமி அவனை இகழ்ந்த ரூத்தை தன் காதலியாக ஏற்றது, கேத்திக்கு ஆச்சர்யத்துடன் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.  

ஒரு கட்டத்தில், பள்ளி ஆசிரியை ஒருவரால் ஹெயில்ஷம் பள்ளியில் வளரும் அவர்கள் மனிதர்களுக்கு செயலிழந்த இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் வழங்க அவர்களின் மாதிரி ஜீன்களை கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட குளோன்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. அதே நேரம், கேதி டாமியை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்திருந்தாள். மற்ற பள்ளி பருவ காதலர்கள் முரண்பாட்டால் விலகும் பொழுது, டாமி மற்றும் ரூத் இருவரின் காதல் பலமாக வளர்ந்திருந்தது
பிறகு சில ஆண்டுகள் கழித்து, பள்ளி கல்வி முடிவடைந்த நிலையில், டாமி, ரூத் மற்றும் கேதி காட்டேஜ்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்குதான் அவர்கள் தங்கள் உறுப்பு தானம் செய்ய அழைப்பு வரும்வரையில் தங்க வேண்டியிருந்தது. இவர்களை போல பல பள்ளிகளை சேர்ந்த குளோன் மாணவர்கள் அங்கு குழுமி தங்கியிருந்தனர். அவர்களுள் இரு காதலர்கள் இவர்களிடம் ஹெயில்ஷம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் டிஃபெரல் (Differal ) சலுகையினை எவ்வாறு மற்ற பள்ளி மாணவர்கள் பெறுவது என வினவினர். தங்களுக்கு அது போன்ற சலுகை அளிக்கப்படுவது பற்றி தெரியாது என இவர்கள் கூற அவர்கள் அதனை பற்றி விளங்க கூறினர்.

அதாவது, ஹெயில்ஷம் பள்ளியில் படித்த இருவர் உண்மையிலேயே காதல் கொன்டிருந்தால், அதை அவர்கள் நிருபீக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில ஆண்டுகள் சேர்ந்து வாழ அனுமதிப்பதற்காக அச்சலுகை இருப்பதாக அவர்களால் கூறப்பட்டது. அதோடு, இச்சலுகை காலத்தில் அவர்கள் தங்கள் உறுப்புகளை தானம் தர அவசியமில்லை எனவும் கூறினர். பிறகு ரூத் கேதியை வெறுப்பேற்றும் விதமாக டாமியை அவள்முன் கட்டிபிடித்து கொஞ்சினாள். இதனால் வெறுப்படைந்த கேதிதான் உறுப்பு தானம் தரும் வேலை வரும் வரை, அங்கிருந்து வேறு இடத்திற்கு அவர்களை விட்டு செல்ல, தானம் தரும் மற்ற குளோன் இளைஞர்களுக்கு (Donor) பணிவிடை புரியும் செவிலியாக (Carer) பணியாற்ற முன்வந்தாள். இதனால், அவள் வேறு, வேறு நகரங்களுக்கு அனுப்பபட்டாள்

பிறகு சில ஆண்டுகள் கழித்து, ரூத்தை, ஒரு மருத்துவமனையில் அவளின் மூன்றாவது உறுப்பு தானம் செய்யும் தருணத்தில் எதேச்சையாக கேதி சந்திக்கிறாள். பிறகு அவளுக்கு கேரராக பணிவிடை புரிகிறாள். ரூத், அவளுக்கும், டாமிக்கும் உண்டான காதல் காட்டேஜிலேயே முறிவடைந்ததை பற்றி கேத்தியிடம் கூறுகிறாள். அதோடு அவனும் தன் இரண்டு உறுப்பு தான ஆபரேஷன்கள் முடித்துவிட்டான் என்பதையும் அவளுக்கு கூறி மூவரும் எங்காவது சுற்றுலா சென்று வரலாம் என தெரிவிக்கிறாள். அவ்வாறாகவே மூவரும் அருகிலுள்ள கடற்கரைக்கு செல்கின்றனர்

அங்கு ரூத், தன் பொறாமையினால்தான், டாமியை கேதியிடமிருந்து அபகரித்ததாகவும், நிஜத்தில் அவர்கள் இருவர் மட்டும்தான் உண்மை காதல் கொண்டுள்ளனர் எனவும் கூறி தன்னை மன்னிக்குமாறு கேதி மற்றும் டாமியிடம் கூறுகிறாள்பிறகு ரூத் தன்னிடம்  டிஃபெரல் சலுகையை தரும் ஆசிரியையின் முகவரி உள்ளது என்று கூறி அதனை கேதி மற்றும் டாமி கைகளில் தருகிறாள்

முதன்முறையாக கேதி தன் வாழ்க்கையை பற்றி கனவு காண்கிறாள். பிறகு அவர்களின் விதி அவர்களை மறுபடியும் பிரிக்கபோகிறது என்பதை அறியாது, இருவரும் ரூத் கூறிய ஆசிரியையிடம் அச்சலுகையை பெற செல்கின்றனர்.... 



English Name        : Never Let Me Go (2010)
Language              : English
Country                  : United States
Directed By           : Mark Romanek
Wiki Page               : Never Let Me Go (2010)
English Reviews : Never Let Me Go (2010)
English Reviews : Never Let Me Go (2010)
Tamil Reviews      : Never Let Me Go (2010)



Never Let Me Go Official Trailer